
சிலம்பில் சங்க மரபிசையின் தொடர்ச்சி – முனைவர் இராச.கலைவாணி
மக்களின் வாழ்வியல் தேவை நிறைவிற்குப் பிறகு தன்னைக் காத்துக்கொள்ள வழிபாட்டுச் சடங்குகளை நாடுகிறான். அச்சடங்குகளில் இசைக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்குகின்றான். தான் வழிபாடு செய்கிறேன் என்பதைப் பிற இனக்குழுக்களுக்குத் தெரிவிக்கவே இசை முழக்கம் இருந்துள்ளது.