About Us

தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகம்

  சிங்கப்பூரில் இயங்கிவரும் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகம் மற்றும் தமிழிசைப்பள்ளி ஆகியவற்றின் நிறுவனரான திரு ப.புருடோத்தமன் அவர்களின் தமிழிசை ஆர்வத்தின் அடுத்த முயற்சியாக 2023-இல் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது.

இக்கழகத்தின் முதன்மையான நோக்கங்களாவன:

•இசைவிழாக்கள் நடத்துதல் வழி அரங்கிசையில் தமிழை முதன்மைப் படுத்தல்.

•இசைக்கல்வியில் தமிழுக்கு முதலிடம்

•இசை ஆர்வத்தையும் அறிவையும் பொதுமக்களிடையே விரிவுபடுத்தல்.

•தமிழிசை ஆராய்ச்சிக்குப் புத்துணர்வு அளித்தல்.

•தமிழிசை நூல்களைப் பதிப்பித்தல், வெளியிடல்.

  கழகம் நிறுவப்பட்ட இக்குறுகிய காலத்தில் நான்கு இசை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2024-இல் பதினைந்து மாணவர்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி உதவப்பட்டுள்ளது.